பாக். வீரர் முகம்மது ரிஸ்வானுக்கு ஐசிசி டி 20 யின் சிறந்த வீரருக்கான விருது + "||" + Mohammad Rizwan and Tammy Beaumont named ICC T20 Cricketers of the Year
பாக். வீரர் முகம்மது ரிஸ்வானுக்கு ஐசிசி டி 20 யின் சிறந்த வீரருக்கான விருது
சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி ஆண்டு தோறும் சிறந்த வீரர்களுக்கான விருதை வழங்கி வருகிறது.
துபாய்
ஐசிசி ஆடவர் டி -20 க்கான ஆடவர் பிரிவில் 2021 ஆம் வருடத்தின் சிறந்த வீரருக்கான விருது பாகிஸ்தான் வீரர் முஹம்மது ரிஸ்வானுக்கு வழங்கப்படுகிறது. 20 ஓவர் போட்டிகளில் மிகச்சிறந்த ஆட்டத்திறனை முகம்மது ரிஸ்வான் வெளிப்படுத்தியிருந்தார்.
கடந்த ஆண்டில் 29 போட்டிகளில் விளையாடியுள்ள முகம்மது ரிஸ்வான் 1,326 ரன்களை குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 73.66- ஆகும். ஸ்டிரைக் ரேட் 134 ஆக உள்ளது. அதேபோல பெண்களுக்கான டி 20- சிறந்த வீராங்கனைக்கான விருது இங்கிலாந்தை சேர்ந்த டேம்மி பியூமான்ட் க்கு வழங்கப்படுகிறது.