நெதர்லாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள்: 48 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி


நெதர்லாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள்: 48 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி
x
தினத்தந்தி 23 Jan 2022 9:52 PM GMT (Updated: 2022-01-24T03:22:16+05:30)

நெதர்லாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டோஹா,

ஆப்கானிஸ்தான்- நெதர்லாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கத்தார் தலைநகர் டோஹாவில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இரு அணிகளும் மோதின.

இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான விக்கெட் கீப்பர் குர்பாசின் சதத்தின் உதவியுடன் 237 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான ஸ்காட் எட்வர்ஸ் 86 ரன்கள் எடுக்க, மற்ற மேட்ஸ்மேன்கள் ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். முடிவில் அந்த அணி 47.4 ஓவர்களில் 189 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 48 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியது.


Next Story