தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் விழிப்படைய செய்தது - ராகுல் டிராவிட்


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் விழிப்படைய செய்தது - ராகுல் டிராவிட்
x
தினத்தந்தி 24 Jan 2022 5:36 AM GMT (Updated: 2022-01-24T11:06:33+05:30)

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் தோல்வி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார்.

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.

இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.

இந்நிலையில், ஒருநாள் தொடரின் தோல்வி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியிருப்பதாவது:-

இந்த தொடர் எங்களை விழிப்படைய செய்யும் தொடராக அமைந்தது.கடந்த உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணி அதிகம் போட்டிகளில் விளையாடவில்லை. அடுத்த உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி முன்னேற்றம் காணும் என்று எதிர்பார்க்கிறேன்.

உலகக்கோப்பை தொடருக்கு முன் நிறைய ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளோம்.இதனால் போதுமான கால அவகாசம் இருக்கிறது.இந்த தொடருக்கான அணியில் ரோகித் சர்மா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாதது தோல்விக்கு முக்கிய காரணம். 

ஷர்துல் தாக்குர் போன்ற வீரர்கள் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படுகின்றனர். இனி வரும் போட்டிகளில் தீபக் சாஹருக்கு அதிகம் வாய்ப்புகள் வழங்கப்படும். அவர் இலங்கைக்கு எதிரான தொடரிலும் சரி இந்த போட்டியிலும் சரி சிறப்பாக விளையாடினார்.வீரர்களிடமிருந்து சிறப்பான பங்களிப்பை எதிர்பார்த்துதான் அவர்களுக்கு திரும்ப திரும்ப வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

ஒரு கேப்டனாக ராகுல் சிறப்பாகவே செயல்பட்டார்.அவர் இப்போது தான் கேப்டனாக செயல்பட தொடங்கியிருக்கிறார்.வீரர்களின் திறன்களை வெளிக்கொண்டு வருவதில் தான் கேப்டன்சியின் பெரும் பங்கு இருக்கிறது. அந்த விஷயத்தில் நாங்கள் சிறிது பின் தங்கி விட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story