இந்திய டெஸ்ட் அணியை வழி நடத்த நான்கு- ஐந்து வீரர்கள் உள்ளனர்- பிரட் லீ

இந்திய டெஸ்ட் அணியை வழி நடத்த நான்கு- ஐந்து வீரர்கள் உள்ளனர்- பிரட் லீ
x
தினத்தந்தி 27 Jan 2022 8:36 AM GMT (Updated: 2022-01-27T14:06:11+05:30)

முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ, தற்போதைய இந்திய டெஸ்ட் அணியை வழி வழிநடத்தக்கூடிய நான்கு-ஐந்து வீரர்கள் உள்ளனர் என்று கூறி உள்ளனர்.

மஸ்கட்,

முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ, தற்போதைய  இந்திய டெஸ்ட் அணியை வழி   வழிநடத்தக்கூடிய நான்கு-ஐந்து வீரர்கள் உள்ளனர் என்று கூறி உள்ளனர்.

இந்திய டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகிய இரண்டு வாரங்களுக்குப் பிறகு பிரட் லீ இந்த கருத்தை கூறியுள்ளார். கடந்த ஆண்டு கோலி இருபது ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் பின்னர் தேர்வாளர்கள் இருபது ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு ஒரே கேப்டனை மட்டுமே விரும்பியதால் அவர் ஒரு நாள் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதுகுறித்து பிரட் லீ கூறியவதாவது

 "இது முழுக்க முழுக்க விராட் கோலியின் முடிவு. நான் பிக் பாஷ் லீக் மற்றும் ஆஷஸ் தொடரில் கவனம் செலுத்தி வருகிறேன். இது பற்றி நான் அதிகம் கூற முடியாது, அது முழுக்க முழுக்க விராட் கோலியை பொறுத்தது. நான்கு-ஐந்து வீரர்கள் டெஸ்டில் இந்தியாவை வழிநடத்த முடியும் என்று நான் நினைக்கிறேன், காலம் தான் பதில் சொல்லும்,” என்றார்.

Next Story