கொரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்ட ரஞ்சி கிரிக்கெட் போட்டி: இரு கட்டமாக நடத்த திட்டம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 28 Jan 2022 1:29 AM GMT (Updated: 2022-01-28T06:59:53+05:30)

முதற்கட்டமாக லீக் ஆட்டங்களை அடுத்த மாதம் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

மும்பை,

கொரோனா பரவலால் தள்ளிவைக்கப்பட்ட ரஞ்சி கிரிக்கெட் போட்டியை இரு கட்டமாக நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமால் கூறுகையில், 

கொரோனா மூன்றாம் அலையால் ரஞ்சி கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. தற்போது பாதிப்பு ஓரளவு குறைந்துவரும் நிலையில், போட்டிகளை இரு கட்டமாக நடத்த திட்டமிட்டுள்ளோம். முதற்கட்டமாக லீக் ஆட்டங்களை பிப்ரவரியில் தொடங்கி மார்ச் வரையிலும், எஞ்சிய ஆட்டங்களை ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகும் நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது. இவ்வாறு அருண் துமால் தெரிவித்தார்.


Next Story