ஐ.பி.எல். வீரர்கள் ஏலம்: இளம் இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 28 Jan 2022 3:12 AM GMT (Updated: 2022-01-28T08:42:07+05:30)

19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் அசத்தி வருகின்றனர்.


மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 12, 13-ந்தேதிகளில் பெங்களூருவில் நடக்கிறது. 

தற்போது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருவதால் இதில் கலக்கும் இந்திய இளம் வீரர்களையும் ஐ.பி.எல். நிர்வாகிகள் குறி வைத்துள்ளனர். தொடக்க ஆட்டக்காரராக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஹர்னூர் சிங், ரகுவன்ஷி, உகாண்டாவுக்கு எதிரான ஆட்டத்தில் 162 ரன்கள் எடுத்து சாதனை படைத்த ராஜ் பாவா, கேப்டன் யாஷ் துல், இடக்கை சுழற்பந்து வீச்சாளர் விக்கி ஆஸ்ட்வால் ஆகியோர் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால், வரும் ஐ.பி.எல் ஏலத்தில் இவர்களுக்கு கணிசமான தொகை ஜாக்பாட்டாக அடிக்க வாய்ப்புள்ளது.


Next Story