ஐ.பி.எல் ஏலம் தொடர்பாக அணி நிர்வாகிகளிடம் ஆலோசிக்க சென்னை வந்த டோனி..!


ஐ.பி.எல் ஏலம் தொடர்பாக அணி நிர்வாகிகளிடம் ஆலோசிக்க சென்னை வந்த டோனி..!
x
தினத்தந்தி 28 Jan 2022 11:53 PM GMT (Updated: 2022-01-29T05:23:11+05:30)

ஐ.பி.எல் ஏலம் தொடர்பாக அணி நிர்வாகிகளிடம் ஆலோசிக்க டோனி சென்னை வந்துள்ளார்.

சென்னை, 

ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் டோனி (ரூ.12 கோடி), ரவீந்திர ஜடேஜா (ரூ.16 கோடி), மொயீன் அலி (ரூ.8 கோடி), ருதுராஜ் கெய்க்வாட் (ரூ.6 கோடி) ஆகியோர் தக்க வைக்கப்பட்டனர். இவர்களுக்குரிய ஊதியம் போக மீதமுள்ள ரூ.48 கோடியை கொண்டு தான் தேவையான எஞ்சிய வீரர்களை ஏலத்தில் அணி நிர்வாகம் எடுக்க வேண்டும். 

ஐ.பி.எல். மெகா ஏலம் வருகிற 12 மற்றும் 13-ந்தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்த நிலையில் ஏலத்தில் வீரர்களை எடுப்பது தொடர்பாக ஆலோசிக்க சென்னை அணியின் கேப்டன் டோனி நேற்று சென்னை வருகை தந்தார். 

எந்தெந்த வீரர்களை எவ்வளவு தொகைக்கு எடுக்கலாம் என்பது குறித்து டோனி சென்னை அணி நிர்வாகிகளிடம் ஆலோசிக்க உள்ளார். ஏலத்தில் அவர் பங்கேற்க கூட வாய்ப்புள்ளது. இது அவரின் முடிவை பொறுத்தது என்று அணியின் வட்டாரங்கள் தெரிவித்தன. 40 வயதான டோனி இந்த சீசனுடன் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story