சதமடிக்காததால் விமர்சனம்: கோலிக்கு முகமது ‌ஷமி ஆதரவு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 29 Jan 2022 1:22 AM GMT (Updated: 2022-01-29T06:52:17+05:30)

விராட் கோலியின் பேட்டிங் குறித்து பலர் விமர்சித்து வரும் நிலையில், அவருக்கு வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமி ஆதரவு தெரிவித்துள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சர்வதேச போட்டியில் சதம் அடித்து 2 ஆண்டுக்கு மேல் ஆகிறது. கடைசியாக 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் சதம் அடித்திருந்தார்.

இதனால் அவரது பேட்டிங் குறித்து பலர் விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் விராட் கோலிக்கு வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமி ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, விராட் கோலி சதம் அடிக்கவில்லை என்றால் என்ன? ஒரு சதம் அவர் எவ்வளவு பெரிய வீரர் என்பதை வரையறுக்காது. சமீப காலமாக அவர் தொடர்ந்து அரை சதம் அடித்துள்ளார். அது அணிக்கு உதவும் வரை விமர்சிக்க எந்த காரணமும் இல்லை.  என்று அவர் கூறினார்.


Next Story