அணியின் வீரராக இருந்தாலும் கேப்டனை போல் தான் சிந்திக்கிறேன் - விராட்கோலி


அணியின் வீரராக இருந்தாலும் கேப்டனை போல் தான் சிந்திக்கிறேன் - விராட்கோலி
x
தினத்தந்தி 31 Jan 2022 6:57 PM GMT (Updated: 31 Jan 2022 6:57 PM GMT)

அணியின் வீரராக இருந்தாலும் கேப்டனை போலவே சிந்திப்பதாக விராட்கோலி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

கேப்டன் பதவியில் இருந்து விலகியது குறித்து இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட்கோலி அளித்த ஒரு பேட்டியில் ‘எல்லாவற்றுக்கும் ஒரு காலவரையறை இருக்கும். அதனை நாம் நிச்சயமாக அறிந்து கொள்ள வேண்டும். 

அதேபோல் கேப்டன் பதவியில் இருந்து விலகி செல்வதும், அதற்கான முடிவை சரியான தருணத்தில் எடுப்பதும் தலைமை பண்பின் ஒரு அங்கமாகும். தலைவராக இருக்க நீங்கள் கேப்டனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அணியின் கேப்டனாக இல்லாத நேரத்திலும் டோனி அணியின் தேவைக்கு எல்லாவிதமான ஆலோசனையும் வழங்கினார். 

டோனியின் கேப்டன்ஷிப்பில் ஆடிய பிறகே நான் கேப்டன் பொறுப்பை ஏற்றேன். எப்போதும் எனது மனநிலை ஒரே மாதிரி தான் இருக்கிறது. நான் அணியின் ஒரு வீரராக இருந்தாலும் எப்போதும் கேப்டனை போல் தான் சிந்திக்கிறேன். அணி வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு பேட்ஸ்மேனாக அணிக்கு இன்னும் நிறைய பங்களிக்க முடியும் என்று கருதுகிறேன்’ என்று தெரிவித்தார்.

Next Story