ஜூனியர் உலக கோப்பை அரைஇறுதி போட்டி: ஆஸ்திரேலியா வெற்றி பெற 291 ரன்கள் இலக்கு


ஜூனியர் உலக கோப்பை அரைஇறுதி போட்டி: ஆஸ்திரேலியா வெற்றி பெற 291 ரன்கள் இலக்கு
x
தினத்தந்தி 2 Feb 2022 6:18 PM GMT (Updated: 2022-02-02T23:48:25+05:30)

இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 290 ரன்கள் எடுத்தது.

ஆன்டிகுவா, 

16 அணிகள் பங்கேற்றுள்ள 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. 

இதில் ஆன்டிகுவாவில் இன்று  நடைபெற்று வரும் 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான இந்திய அணி, 3 தடவை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

இப்போடியில் டாஸ் ஜெயித்த இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஆங்கிரிஷ் ரகுவன்சி மற்றும் ஹர்னூர் சிங் களமிறங்கினர்.

ரகுவன்சி 6 ரன்னிலும், ஹர்னூர் சிங் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து களமிறங்கிய ஷேக் ரஷித் சிறப்பாக விளையாடி 94 ரன்கள் எடுத்தார்.

அவருக்கு பக்கபலமாக கேப்டன் யாஷ் துல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்தார். அவர் 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 290 ரன்கள் எடுத்தது. 

இதனை தொடர்ந்து 291 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது.

Next Story