இந்திய அணியின் 1000வது போட்டி! ரோகித் சர்மாவுடன் இஷான் கிசன் தொடக்கவீரராக களமிறங்குவார்!


இந்திய அணியின் 1000வது போட்டி! ரோகித் சர்மாவுடன் இஷான் கிசன் தொடக்கவீரராக களமிறங்குவார்!
x
தினத்தந்தி 5 Feb 2022 8:55 AM GMT (Updated: 2022-02-05T14:25:01+05:30)

ஒருநாள் போட்டிகளில் கேப்டன் ரோகித் சர்மாவுடன் இஷான் கிசன் தொடக்கவீரராக களமிறங்குவார் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.

ஆமதாபாத், 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி ஆமதாபாத்தில் வருகிற நாளை தொடங்குகிறது.

இந்த நிலையில் இந்திய அணியில் ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஷ் அய்யர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. மேலும் வலை பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி மற்றும் 3 உதவியாளர்களுக்கும் தொற்று உறுதியானது.

இதையடுத்து இந்திய அணியில் கூடுதல் தொடக்க வீரராக மயங்க் அகர்வால் நேற்று சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக இஷான் கி‌ஷனும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், நாளை முதல் தொடங்க ஒருநாள் போட்டிகளில் கேப்டன் ரோகித் சர்மாவுடன் இளம் வீரர் இஷான் கிசன் தொடக்கவீரராக களமிறங்குவார் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார். துணை கேப்டன் கே எல் ராகுல் முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த முடிவு எடுப்பதை தவிற வேறு வழியில்லை என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.

இந்த போட்டி இந்திய அணியின் 1000வது போட்டியாக அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள ராகுல் டிராவிட் மற்றும் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மா ஆகியோரின் புதிய கூட்டணியில் தொடங்கவிருக்கும் முதல் போட்டி என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Next Story