1000-வது ஒருநாள் போட்டியில் 100-வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார் யுஸ்வேந்திர சாஹல்..!


1000-வது ஒருநாள் போட்டியில் 100-வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார் யுஸ்வேந்திர சாஹல்..!
x
தினத்தந்தி 6 Feb 2022 10:59 AM GMT (Updated: 2022-02-06T16:29:28+05:30)

20-வது ஓவரை யுஸ்வேந்திர சாஹல் வீசிய போது அந்த ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

ஆமதாபாத்,

இந்தியாவின் 1,000-வது ஒருநாள் போட்டி ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று  நடைபெற்று வருகிறது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி பொல்லார்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

இந்த நிலையில், போட்டியின் 20-வது ஓவரை யுஸ்வேந்திர சாஹல் வீசிய போது அந்த ஓவரின் கடைசி 2 பந்துகளில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவரது பந்துவீச்சில் பூரான் மற்றும் பொல்லார்ட் வரிசையாக ஆட்டமிழந்தனர்.

இதன்மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றி அவர் சாதனை படைத்தார்.

மேலும், குறைந்த எண்ணிக்கையிலான போட்டிகளில் விளையாடி, விரைவாக 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் சாஹல் இணைந்தார். அவர் 60 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.  இந்த பட்டியலில் முதல் இடத்தில் முகமது சிராஜ் உள்ளார்.

Next Story