ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணி அறிவிப்பு


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணி அறிவிப்பு
x
தினத்தந்தி 9 Feb 2022 8:40 PM GMT (Updated: 2022-02-10T02:10:50+05:30)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் போட்டிக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 24 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாட இருக்கிறது. பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் ராவல்பிண்டியில் மார்ச் 4-ந்தேதி தொடங்குகிறது. 

டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அணி விவரம் வருமாறு:- பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், அப்துல்லா ஷபிக், அசார் அலி, பஹீம் அஷ்ரப், பவாத் ஆலம், ஹாரிஸ் ரவுப், ஹசன் அலி, இமாம் உல்-ஹக், முகமது நவாஸ், நமன் அலி, சஜித் கான், சாத் ஷகீல், ஷகீன் ஷா அப்ரிடி, ஷான் மசூத், ஜாகித் மக்மூத். மாற்று வீரர்களாக கம்ரான் குலாம், முகமது அப்பாஸ், நசீம் ஷா, சர்ப்ராஸ் அகமது, யாசிர் ஷா ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

Next Story