உலக கோப்பை வென்ற இந்திய ஜூனியர் வீரர்கள் தாயகம் திரும்பினர்


உலக கோப்பை வென்ற இந்திய ஜூனியர் வீரர்கள் தாயகம் திரும்பினர்
x
தினத்தந்தி 10 Feb 2022 6:49 AM GMT (Updated: 2022-02-10T12:19:51+05:30)

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் 5வது முறையாக கோப்பையை வென்ற இந்திய ஜூனியர் வீரர்கள் தாயகம் திரும்பியனர்.

புதுடெல்லி,

வெஸ்ட் இண்டீசில் நடந்த ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் (19 வயதுக்குட்பட்டோர்) யாஷ் துல் தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்து 5-வது முறையாக மகுடம் சூடியது. இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கிருந்து விமானத்தில் புறப்பட்ட இந்திய வீரர்கள் ஆம்ஸ்டர்டாம் மற்றும் துபாய் வழியாக நேற்று காலை பெங்களூரு வந்து சேர்ந்தனர். நீண்ட பயணக்களைப்பால் சில மணி நேரம் ஓய்வு எடுத்த இந்திய இளம் படையினர் பின்னர் பாராட்டு விழாவுக்காக ஆமதாபாத் சென்றனர்.

உலக கோப்பையை வென்ற இந்திய ஜூனியர் வீரர்களுக்கு தலா ரூ.40 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே அறிவித்துள்ளது. அவர்களுக்கு இன்று பாராட்டு விழா நடத்தப்படும் என்று தெரிகிறது.

Next Story