‘கோடி’களில் ஏலம் எடுக்கப்பட்ட ஜூனியர் வீரர்கள்..!


‘கோடி’களில் ஏலம் எடுக்கப்பட்ட ஜூனியர் வீரர்கள்..!
x
தினத்தந்தி 13 Feb 2022 7:02 PM GMT (Updated: 13 Feb 2022 7:02 PM GMT)

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் 2 வது நாள் ஏலம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது.

பெங்களூரு,

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் 2 வது நாள் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்றது. ஏலப்பட்டியலில் முதலில் 590 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்த நிலையில் இன்று 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் ஆடிய 10 வீரர்கள் சேர்க்கப்பட்டதால் இந்த எண்ணிக்கை 600 ஆக உயர்ந்தது.

ஜூனியர் வீரர்களில், இந்தியா 5-வது முறையாக ஜூனியர் உலக கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றிய ஆல்-ரவுண்டர் ராஜ் அங்கட் பாவாவை ரூ.2 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது. மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் பந்து வீசக்கூடிய ராஜ்வர்தன் ஹேங்கர்கேகரை ரூ.1½ கோடிக்கு சென்னை அணி ஒப்பந்தம் செய்தது. 

ஆனால் ஜூனியர் அணியின் கேப்டன் யாஷ் துல் ரூ.50 லட்சத்திற்கே விலை போனார். அவர் தனது ஐ.பி.எல். பயணத்தை சொந்த ஊர் அணியான டெல்லி கேப்பிட்டல்சுடன் தொடங்க உள்ளார். மற்றொரு ஜூனியர் வீரரான சுழற்பந்து வீச்சாளர் அனீஷ்வர் கவுதமை ரூ.20 லட்சத்துக்கு பெங்களூரு எடுத்தது.

Next Story