வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டி20: ரசிகர்களுக்கு அனுமதி இல்லை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 15 Feb 2022 1:58 AM GMT (Updated: 2022-02-15T07:28:53+05:30)

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி கொடுக்கவில்லை.

கொல்கத்தா,

கொல்கத்தாவில் நடக்கும் விளையாட்டு போட்டிகளுக்கு பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்று மேற்கு வங்காள மாநில அரசு ஏற்கனவே கூறி விட்டது. ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி கொடுக்கவில்லை. 

இதனால் முதலாவது 20 ஓவர் போட்டி ரசிகர்கள் இன்றியே நடக்க உள்ளது. விளம்பரதாரர்கள் மற்றும் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த நிலையில் கடைசி இரு 20 ஓவர் போட்டிகளுக்கு ரசிகர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று பெங்கால் கிரிக்கெட் சங்கம், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது.


Next Story