2-வது மகளிர் ஒருநாள் போட்டி: 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து


2-வது மகளிர் ஒருநாள் போட்டி: 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து
x
தினத்தந்தி 15 Feb 2022 5:46 AM GMT (Updated: 15 Feb 2022 5:46 AM GMT)

இந்தியாவிற்கு எதிரான 2-வது மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வெற்றிபெற்றது.

குயின்ஸ்டவுன்,

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது

இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து மகளிர் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி குயின்ஸ்டவுனில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் மிதாலிராஜ் 66 ரன்களும், ரைகா கோஸ் 65 ரன்களும் குவித்தனர்.

இதையடுத்து 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், எமிலியா கெர்ரின் அபாரமான சதத்தால்(119) அந்த அணி 49 ஓவர்களில் இலக்கை கடந்து வெற்றிபெற்றது. 

கடைசிவரை ஆட்டமிழக்காமல் நின்று 119 ரன்கள் குவித்து வெற்றிக்கு உதவிய எமிலியா கெர் ஆட்டநாயகி விருதை பெற்றுக்கொண்டார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது. 3-வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.


Next Story