ரவி பிஷ்னோய்க்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது: ரோகித் சர்மா


ரவி பிஷ்னோய்க்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது: ரோகித் சர்மா
x
தினத்தந்தி 17 Feb 2022 9:13 AM GMT (Updated: 2022-02-17T14:43:13+05:30)

பந்து வீச்சாளர்களின் பெரும் முயற்சியால் வெஸ்ட் இண்டீசை குறைந்த ரன்னில் கட்டுப்படுத்த முடிந்ததாக ரோகித் சர்மா குறிப்பிட்டுள்ளார்.

கொல்கத்தா,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதலாவது டி20  போட்டியில் இந்திய அணி  6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில்ல் இந்திய அணி தரப்பில் ரவி பிஷ்னோய் 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அத்துடன் ஆட்டநாயகன் விருதையும் பெற்றுக்கொண்டார். இந்த நிலையில், போட்டி முடிந்தபிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஒரு பேட்டியில் கூறும்போது,

பிஷ்னோய் மிகவும் திறமையானவர். அதனால் தான் நாங்கள் அவரை உடனடியாக அணியில் சேர்த்தோம். அவரிடம் நிறைய திறமைகள் உள்ளன. அவரால் எந்த சூழ்நிலையிலும் பந்துவீச முடியும் என்று கூறினார். மேலும், இந்த ஆட்டம் அதிக நம்பிக்கையை தருகிறது. பந்து வீச்சாளர்களின் பெரும் முயற்சியால் எதிரணியை  குறைந்த ரன்களில் கட்டுப்படுத்த முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story