நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ! ரஞ்சி டிராபி போட்டியில் சதமடித்த ரகானே


நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ! ரஞ்சி டிராபி போட்டியில் சதமடித்த ரகானே
x
தினத்தந்தி 17 Feb 2022 12:23 PM GMT (Updated: 2022-02-17T17:53:53+05:30)

இந்திய அணியில் இடம் பிடிக்க ரஞ்சி டிராபியில் விளையாடி வரும் ரகானே இன்று சதமடித்தார்.

அகமதாபாத்,

கொரோனா மூன்றாம் அலையால் பாதியில் நிறுத்தப்பட்ட ரஞ்சி டிராபி தொடர் தற்போது மீண்டும் நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய டெஸ்ட் அணியில் விளையாடிவரும் புஜாரா மற்றும் ரகானே ஆகியோர் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. அதில் ரகானே 6 இன்னிங்ஸ்களில் வெறும் 136 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். தொடர்ந்து சொதப்பி வந்த ரகானே இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்டன் பதவில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் பழைய பார்முக்கு வரவேண்டியும், அணியில் நிரந்தரமாக இடம் பிடிக்கவும், புஜாரா மற்றும் ரகானே ஆகிய இருவரும் தற்போது ரஞ்சி டிராபி தொடரில் விளையாடி வருகின்றனர்.

இன்று நடைபெற்றுவரும் ரஞ்சி டிராபி போட்டியில் மும்பை அணிக்காக விளையாடிவரும் ரகானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் தர போட்டியில் தனது 36-வது  சதத்தை பூர்த்திசெய்தார். அவர் 191 பந்துகளில் 2 சிக்சர்கள் மற்றும் 11 பவுண்டரிகளுடன் சதம் அடித்தார். இந்த சதத்தின் மூலம் அவர் மீண்டும் தனது பழைய பார்முக்கு திரும்பி வருகிறார். முதல்நாள் முடிவில் 108 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

அதே போன்று சவுராஸ்டிரா அணிக்காக புஜாரா விளையாடி வருகிறார். இருவரும் ரஞ்சி டிராபி தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதன் மூலம், அவர்களால் இந்திய டெஸ்ட் அணியில் தங்களுக்கென்று நிரந்தர இடத்தை பிடிக்க முடியும்.


Next Story