தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: நியூசிலாந்து அபார வெற்றி


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: நியூசிலாந்து அபார வெற்றி
x
தினத்தந்தி 19 Feb 2022 9:12 AM GMT (Updated: 19 Feb 2022 9:12 AM GMT)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

கிறிஸ்ட்சர்ச்,

தென் ஆப்பிரிக்க அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. 

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.  அதன்படி முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 95 ரன்னில் சுருண்டது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 482 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. ஹென்ரி நிக்கோல்ஸ் சதமடித்து 105 ரன்னில் ஆட்டமிழந்தார். விக்கெட் கீபப்ர் டாம் பிளண்டல் 96 ரன்கள் அடித்து சதத்தை தவறவிட்டார்.

387 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இரண்டாவது இன்னிங்சிலும் அந்த அணி மளமளவென விக்கெட்டை இழந்தது 111 ரன்னில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 276 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் வரும் 25-ஆம் தேதி நடைபெற உள்ளது.


Next Story