வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஆண்டர்சன், பிராட் நீக்கம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 24 Feb 2022 10:39 PM GMT (Updated: 2022-02-25T04:09:58+05:30)

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் நீக்கப்பட்டனர்.

லண்டன்,

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இங்கிலாந்து மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் நீக்கப்பட்டனர். 

39 வயதான ஆண்டர்சன் இதுவரை 640 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். நீக்கம் குறித்து மவுனத்தை கலைத்துள்ள அவர், ‘அணிக்கு நான் தேர்வு செய்யப்படவில்லை என்று போனில் தொடர்பு கொண்டு தெரிவித்த போது அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் இருந்தது. இத்துடன் எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விடக்கூடாது என்று பிரார்த்திக்கிறேன். 

ஒரு வேளை இங்கிலாந்து அணிக்காக இனி என்னால் விளையாட முடியாமல் போனால் எனக்கு ஆதரவாக பலர் உள்ளனர் என்பதை அறிவேன். இன்னும் பங்களிக்க நிறைய உள்ளது. தொடர்ந்து விளையாடும் வேட்கையுடன் காத்திருக்கிறேன்’ என்றார்.


Next Story