தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: நியூசிலாந்து அணி தடுமாற்றம்


தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: நியூசிலாந்து அணி தடுமாற்றம்
x
தினத்தந்தி 26 Feb 2022 7:32 AM GMT (Updated: 2022-02-26T13:02:37+05:30)

இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் குவித்துள்ளது.

கிறிஸ்ட்சர்ச்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 276 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது

இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச், மைதானத்தில் நேற்று தொடங்கியது இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில்  பேட்டிங்கை தேர்வு செய்தது .அந்த அணியில்  சிறப்பாக விளையாடிய சரேல் எர்வீ சதம் அடித்து அசத்தினார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி  3 விக்கெட்டுக்களை இழந்து 238 ரன்கள் எடுத்து இருந்தது.ராசி வெண்டர் டசன் 13 ரன்களிலும் ,டெம்பா பவுமா 22 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ராசி வெண்டர் டசன் 35 ரன்களிலும் , டெம்பா பவுமா  29 ரங்களிலும் நடையை கட்ட தென் ஆப்பிரிக்க  அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து  தடுமாறியது.

இறுதியில் அந்த அணி 364 ரன்களுக்கு அனைத்து  விக்கெட்களையும் இழந்தது. நியூசிலாந்து தரப்பில் வாக்னர் 4 விக்கெட்களை கைப்பற்றினார். இதை தொடர்ந்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆட தொடங்கியது.

அந்த அணியின் கேப்டனும் தொடக்க வீரரும் ஆன டாம் லேதம் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். அவரை தொடர்ந்து வில் எங் 3 ரன்களிலும் கான்வெ 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். காலின் டி கிராண்ட்ஹோம்  மட்டும் ஆறுதல் அளிக்கும் விதமாக அரைசதம் அடித்தார்.

இரண்டாவது நாள் ஆட்ட  நேர முடிவில்  நியூசிலாந்து  அணி 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் குவித்துள்ளது. டேரில் மிட்சேல் 29 ரன்களுடனும்  காலின் டி கிராண்ட்ஹோம்  54 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா 3 விக்கெட்களையும் ஜான்சன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Next Story