தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட்; நியூசிலாந்து வீரர் காலின் டி கிராண்ட்கோம் சதம் அடித்து அசத்தல்


தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட்; நியூசிலாந்து வீரர் காலின் டி கிராண்ட்கோம் சதம் அடித்து அசத்தல்
x
தினத்தந்தி 27 Feb 2022 1:47 AM GMT (Updated: 27 Feb 2022 1:47 AM GMT)

காலின் டி கிராண்ட்கோம் 120 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 கிறிஸ்ட்சர்ச்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 276 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது

இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச், மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில்  பேட்டிங்கை தேர்வு செய்தது . அந்த அணியில்  சிறப்பாக விளையாடிய சரேல் எர்வீ சதம் அடித்து அசத்தினார்.

இறுதியில் அந்த அணி 364 ரன்களுக்கு அனைத்து  விக்கெட்களையும் இழந்தது. நியூசிலாந்து தரப்பில் வாக்னர் 4 விக்கெட்களை கைப்பற்றினார். இதை தொடர்ந்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆட தொடங்கியது.

அந்த அணியின் கேப்டனும் தொடக்க வீரரும் ஆன டாம் லேதம் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். அவரை தொடர்ந்து வில் எங் 3 ரன்களிலும் கான்வெ 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். காலின் டி கிராண்ட்ஹோம்  மட்டும் ஆறுதல் அளிக்கும் விதமாக அரைசதம் அடித்தார்.

இரண்டாவது நாள் ஆட்ட  நேர முடிவில்  நியூசிலாந்து  அணி 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் குவித்து இருந்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஒரு முனையில் விக்கெட்கள் சரிந்தாலும் மறுமுனையில் நியூசிலாந்து அணியின் காலின் டி கிராண்ட்கோம் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.

இறுதியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 293 ரன்களுக்கு 10 விக்கெட்களையும் இழந்தது. காலின் டி கிராண்ட்கோம் 120 ரன்களுடன்  இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் தென்னாபிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 71 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Next Story