12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்


12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 4 March 2022 3:16 AM GMT (Updated: 2022-03-04T08:46:10+05:30)

முதல் போட்டியில் நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதி வருகின்றன.

மவுன்ட் மாங்கானு, 

இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 12-வது பெண்கள் உலககோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) நியூசிலாந்தில் இன்று தொடங்கியது. 

இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு மவுன்ட்மாங்கானுவில் தொடங்கிய தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 

இதில் பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டு உள்ள ஆஸ்திரேலியாவுக்கு திடீர் பின்னடைவாக அந்த அணியின் ஆல்-ரவுண்டர் 24 வயதான ஆஷ்லி கார்ட்னெர் கொரோனா பாதிப்பில் சிக்கியுள்ளார். இதனால் அவர் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதால் ஆஸ்திரேலிய அணியின் முதல் இரு லீக் ஆட்டங்களில் விளையாட முடியாது. மற்ற வீராங்கனைகள் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story