மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்துக்கு 141 ரன்கள் இலக்கு


மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்துக்கு 141 ரன்கள் இலக்கு
x
தினத்தந்தி 7 March 2022 4:42 AM GMT (Updated: 7 March 2022 4:42 AM GMT)

மழையின் காரணமாக ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் தலா 27 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

டுனேடின்,

மகளிர் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் 5 ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து- வங்கதேச அணிகள் மோதி வருகின்றன. மழையின் காரணமாக ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் தலா 27 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச மகளிர் அணியின் தொடக்க பேட்ஸ்மேன்கள் அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். தொடக்க பேட்ஸ்மேன்களான சமீனா 33 ரன்களும், பர்கானா 52 ரன்களும் எடுத்தனர். ஆனால் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க தவறினர். இறுதியில் அந்த அணி 27 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.


Next Story