இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி 375 ரன்களுக்கு ஆல் அவுட்


இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி 375 ரன்களுக்கு ஆல் அவுட்
x
தினத்தந்தி 11 March 2022 3:15 PM GMT (Updated: 11 March 2022 3:15 PM GMT)

வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 375 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஆண்டிகுவா,

இங்கிலாந்து அணி , வெஸ்ட்  இண்டீசுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி இரு அணிகளும் மோதுகிற முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது.  டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு உட்பட்டது என்பதால் இந்த தொடர் இரு அணிகளுக்கும் முக்கியமானதாகும்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்கள்  விரைவாக ஆட்டமிழந்தாலும் இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டா சிறப்பாக விளையாடி சதமடித்தார். 140 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். இதையடுத்து இங்கிலாந்து அணி  311 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.

இதையடுத்து வெஸ்ட்  இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 157.3 ஓவர்களில் 375 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக போனர் 123 ரன்கள் குவித்தார். இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது இரண்டாம் இன்னிங்சில் விளையாடி வருகிறது.


Next Story