பெண்கள் உலகக்கோப்பை; கேப்டனாக அதிக போட்டிகளில் விளையாடி மிதாலி ராஜ் உலக சாதனை!


image courtesy; @BCCIWomen twitter
x
image courtesy; @BCCIWomen twitter
தினத்தந்தி 12 March 2022 4:14 AM GMT (Updated: 12 March 2022 4:14 AM GMT)

உலக கோப்பை தொடரில் அதிக ஆட்டங்களில் பங்கேற்ற கேப்டன் என்ற சாதனையை மிதாலி ராஜ் படைத்தார்.

ஹாமில்டன்,

ஹாமில்டனில் இன்று நடைபெற்று வரும் உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில், மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, ஸ்டாபானி டெய்லர் தலைமையிலான வெஸ்ட்இண்டீசுடன் விளையாடி வருகிறது.

இப்போட்டியில்  தலைமை தாங்கியதன் மூலம் உலக கோப்பை போட்டியில் அதிக ஆட்டங்களில் கேப்டனாக இருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் பெலின்டா கிளார்க்கின் (23 ஆட்டங்கள்) சாதனையை மிதாலி ராஜ் முறியடித்தார். 

உலக கோப்பை தொடரில், இதுவரை மிதாலி ராஜ்  24 ஆட்டங்களில் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
முன்னதாக இந்திய கேப்டன் மிதாலி ராஜ், 6 உலக கோப்பை தொடரில் பங்கேற்ற முதல் வீராங்கனை என்ற சாதனையையும் தன்வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story