பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 251-3


பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 251-3
x

உஸ்மான் கவாஜாவின் சதத்தால், ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது.

கராச்சி,

ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரண்டாவது டெஸ்ட் கராச்சியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி ஆஸ்திரேலியா முதலில் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் கவாஜா சதமடித்து அசத்தினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் 36 ரன்கள் குவித்தார். மார்னஸ் லபுஸ்ஷேன் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். ஸ்டீவ் ஸ்மித் 72 ரன்கள் குவித்தார்.

ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்துள்ளது. உஸ்மான் கவாஜாவும்(127), நாதன் லியோனும்(0) களத்தில் உள்ளனர். நாளை இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. 


Next Story