டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ரா புதிய சாதனை!


photo credit:dnaindia.com
x
photo credit:dnaindia.com
தினத்தந்தி 14 March 2022 8:54 AM GMT (Updated: 14 March 2022 8:54 AM GMT)

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாஸ்பிரித் பும்ரா கபில் தேவின் சாதனையை சமன் செய்தார்.

பெங்களூரு,

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. 

இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இந்திய மண்ணில் முதல் முறையாக 5 விக்கெட்டை எடுத்தார். தன் 29-வது டெஸ்டில் அவர் 8-வது முறையாக 5 விக்கெட்டை கைப்பற்றி உள்ளார்.

அவர் இதற்கு முன்னதாக வெஸ்ட் இன்டீஸ், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் தலா 2 முறையும், ஆஸ்திரேலியா, இந்தியாவில் ஒருமுறையும் அவர் 5 விக்கெட்டை எடுத்துள்ளார்.

இதற்கு முன்பு இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் கபில்தேவ், 29 டெஸ்டுகளில் 8 முறை 5 விக்கெட்டுகளை எடுத்து இருந்தார். இதன்மூலம் அவரது சாதனையை பும்ரா சமன் செய்தார். இந்திய மண்ணில் முதல் முறையாக 5 விக்கெட் கைப்பற்றியது மகிழ்ச்சி அளிப்பதாக பும்ரா கூறினார்.


Next Story