அஸ்வினிடம் எப்பொழுது பந்தை கொடுத்தாலும் வெற்றிகரமாக வீசுகிறார்: ரோகித் சர்மா


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 15 March 2022 12:54 AM GMT (Updated: 2022-03-15T06:24:39+05:30)

ரவீந்திர ஜடேஜா பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என்று எல்லாவற்றிலும் சிறந்து விளங்குவதாக ரோகித் சர்மா புகழாரம் சூட்டினார்.

பெங்களூரு,

இந்தியா- இலங்கை அணிகள் மோதிய பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது. இந்த நிலையில், அணியின் வெற்றி குறித்தும், வீரர்கள் செயல்பட்ட விதம் குறித்தும் கோப்டன் ரோகித் சர்மா கூறுகையில்,

‘இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருவதை தனிப்பட்ட முறையிலும், அணியாகவும் அனுபவித்து வருகிறேன். ஒரு அணியாக சில விஷயங்களை அடைய வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். அதனை எட்டி இருக்கிறோம். ரவீந்திர ஜடேஜா பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என்று எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகிறார். அது அணிக்கு பலமாகும். 

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் அந்த பார்மை டெஸ்ட் தொடரிலும் தொடர்ந்தார். புஜாரா, ரஹானே போன்ற வீரர்களின் பெரிய இடத்தை நிரப்புவது எப்படி என்பது அவருக்கு தெரியும். அவர் அந்த பணியை சரியாக செய்து வருகிறார். ரிஷாப் பண்ட் ஒவ்வொரு ஆட்டத்திலும் மேம்பட்டு வருகிறார். அஸ்வினிடம் எப்பொழுது பந்தை கொடுத்தாலும் வெற்றிகரமாக பந்து வீசுகிறார். அவர் எல்லா காலங்களிலும் சிறந்த வீரர் ஆவார்’. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story