உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 100 விக்கெட் வீழ்த்தி அஸ்வின் புதிய சாதனை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 15 March 2022 8:10 AM GMT (Updated: 15 March 2022 8:10 AM GMT)

இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மட்டும் 100 விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

பெங்களூரு,

தனது அபார பந்துவீச்சின் மூலம் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வரும் அஸ்வின், தற்போது புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். 

அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 14 போட்டிகளில் 71 விக்கெட் மற்றும் நடப்பு தொடரில் 7 டெஸ்டில் 29 விக்கெட் என மொத்தம் 21 போட்டிகளில் 100 விக்கெட் எடுத்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்த மிகப்பெரிய மைல்கல்லை எட்டிய முதல் வீரர் அஸ்வின் ஆவார். 

35 வயதான அஸ்வின், 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 442 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், இதில் 30 ஐந்து பந்துகள் மற்றும் ஏழு 10 விக்கெட்டுகள் அடங்கும். டெஸ்டில் உலக அளவில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களின் பட்டியலில், 8 ஆவது இடத்திலும், இந்திய அளவில் இரண்டாவது இடத்திலும் (முதலிடத்தில் அனில் கும்ளே 619 விக்கெட்) உள்ளார்.


Next Story