டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் உடற்தகுதி தேர்வில் தோல்வி!


image courtesy: @PrithviShaw
x
image courtesy: @PrithviShaw
தினத்தந்தி 17 March 2022 11:44 AM GMT (Updated: 2022-03-17T17:14:17+05:30)

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் பிரித்வி ஷா யோ-யோ டெஸ்ட் என அழைக்கப்படும் உடற்தகுதி தேர்வில் தோல்வியடைந்தார்.

புதுடெல்லி,

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் பிரித்வி ஷா யோ-யோ டெஸ்ட் என அழைக்கப்படும் உடற்தகுதி தேர்வில் தோல்வியடைந்தார். 

22 வயதான தொடக்க ஆட்டக்காரரான ஷா தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது உடற்தகுதி நிலை குறித்த பரிசோதனையை மேற்க்கொண்டார், ஆனால் அதன் முடிவுகள் அவரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆண்களுக்கான நிலையான மதிப்பெண் 16.5 ஆக இருந்த நிலையில், அவர் உடற்தகுதி தேர்வில் 15 க்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளார், 

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "இது ஐபிஎல்லில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக பிருத்வி விளையாடுவதைத் தடுக்காது. இவை ஒரு பிட்னஸ் அளவுகோலாகும், அவர் மீண்டும் பரிசோதிக்கப்படுவார். அவர் மூன்று ரஞ்சிப் போட்டிகளைத் அடுத்தடுத்து விளையாடியுள்ளார். ஒருமுறை நீங்கள் மூன்று முதல்தர ஆட்டங்களை தொடர்ந்து விளையாடினால், அதன் சோர்வு உங்கள் யோ-யோ ஸ்கோரையும் பாதிக்கும்" என்று கூறினார்.

முன்னதாக இந்திய தேசிய அணியில் இருந்து பிரித்வி ஷா நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story