வங்காளதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்: முக்கிய தென் ஆப்பிரிக்க வீரர்கள் விலகல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 17 March 2022 11:29 PM GMT (Updated: 2022-03-18T04:59:40+05:30)

ஐபிஎல் போட்டிகளில் விளையாட இருப்பதனால், தென் ஆப்பிரிக்காவின் முக்கிய வீரர்கள் இந்த டெஸ்ட் தொடரிலிருந்து விலகுகின்றனர்.

டாக்கா,

வங்காளதேச கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதன்படி தென்ஆப்பிரிக்கா-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் இன்று இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கி நடக்கிறது. 

இதற்கிடையே, வங்காளதேச டெஸ்ட் தொடருக்கான தென்ஆப்பிரிக்க அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ரபடா, இங்கிடி, மார்கோ ஜேன்சன், மார்க்ராம், வான்டெர் துஸ்சென் ஆகியோர் ஐ.பி.எல். போட்டியில் விளையாட முன்னுரிமை கொடுத்திருப்பதால் அவர்கள் டெஸ்ட் அணியில் இடம் பெறவில்லை.


Next Story