பெண்கள் உலகக்கோப்பை: மழையால் கைவிடப்பட்ட போட்டியால் அரையிறுதிக்கு தகுதிபெற்ற தென் ஆப்பிரிக்கா


பெண்கள் உலகக்கோப்பை: மழையால் கைவிடப்பட்ட போட்டியால் அரையிறுதிக்கு தகுதிபெற்ற தென் ஆப்பிரிக்கா
x
தினத்தந்தி 24 March 2022 9:09 AM GMT (Updated: 2022-03-24T14:39:59+05:30)

இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்ட நிலையில், தென் ஆப்பிரிக்க அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

வெலிங்டன்,

பெண்கள் உலகக்கோப்பை போட்டியானது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் 23 ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. 

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் களமிறங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் அபார பந்துவீச்சால், தென் ஆப்பிரிக்க அணி தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாடியது. 

தென் ஆப்பிரிக்க அணி 10.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை பெய்ததால், ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால், போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க பெண்கள் அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றது.


Next Story