சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடர் - ஜூன் மாதம் தொடங்கும் என அறிவிப்பு


சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடர் - ஜூன் மாதம் தொடங்கும் என அறிவிப்பு
x
தினத்தந்தி 26 March 2022 4:45 PM GMT (Updated: 2022-03-26T22:15:40+05:30)

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் தொடங்கும் என மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

சாலை பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்ற கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. இந்த தொடருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில், வரும் ஜூன் 4 ஆம் தேதி முதல் ஜூலை 3 ஆம் தேதி வரை இந்த கிரிக்கெட் தொடர் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடைபெற உள்ள கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான்களும் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story