வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட்: முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 233-4


வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட்: முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 233-4
x

தென் ஆப்பிரிக்க அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்துள்ளது.

டர்பன்,

வங்காளதேச அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளும் இன்று முதல் டெஸ்டில் மோதின.
 
இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டீன் எல்கரும், சரல் எர்வீயும் களமிறங்கினர். எல்கர் 67 ரன்களில் அவுட்டானார். சரல் எர்வீ 41 ரன்களில் வெளியேறினார்.

கீகன் பீட்டர்சன் 19 ரன்னிலும், ரியான் ரிக்கல்சன் 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்க அணி 76.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்த போது, போதிய வெளிச்சமின்மையின் காரணமாக முதல்நாள் ஆட்டம் முடித்துக்கொள்வதாக அறிவிக்கப்பட்டது. தெம்பா பவுமாவும் (53), கைல் வெரின்னும் (27) களத்தில் உள்ளனர். நாளை இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.


Next Story