ஐபிஎல் : சென்னை அணிக்கு எதிரான தோல்வி குறித்து டு பிளெஸ்சிஸ் கூறியது என்ன...?


Image Courtesy : IPL
x
Image Courtesy : IPL
தினத்தந்தி 13 April 2022 10:48 AM GMT (Updated: 2022-04-13T16:18:36+05:30)

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை , பெங்களூரூ அணிகள் மோதின

மும்பை,

 நேற்று நடைபெற்ற  ஐ.பி.எல் 2022 தொடரின் 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதின 

இந்த ஆட்டத்தில் 23 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது 

இந்நிலையில் போட்டிக்கு பிறகு தோல்வி குறித்து பெங்களூரு அணியின் கேப்டன்  டூபிளெஸ்சிஸ்  கூறியதாவது ;

"முதல் 7-8 ஓவர்கள் மிகவும் நன்றாக இருந்தது, பின்னர் நாங்கள் என்ன முயற்சி செய்தோமோ , அது பலனளிக்கவில்லை.  பெரிய ஸ்கோரைத் சேஸ் செய்வதற்க்கு  உங்களுக்கு ஒன்று தேவை.   முதல் 4 பேட்ஸ்மேன்கள் நல்ல தொடக்கம் அமைக்க வேண்டும் .எங்களிடம் அது இல்லை . சென்னை அணி ஆடுகளத்தில் அவர்களின் சுழற்பந்து வீச்சாளர்களை நன்றாகப் பயன்படுத்தியது.இவ்வாறு அவர் கூறினார் .

Next Story