ஐபிஎல் : 'ரிட்டையர்டு அவுட்’ முறை குறித்து அஸ்வின் கூறுவது என்ன..?


Image Courtesy : IPL
x
Image Courtesy : IPL
தினத்தந்தி 13 April 2022 1:06 PM GMT (Updated: 13 April 2022 1:06 PM GMT)

ஐ.பி.எல் வரலாற்றில் ‘ரிட்டையர்டு அவுட்’ முறையில் வெளியேறிய முதல் வீரராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் மாறியுள்ளார்.


மும்பை,

ஐ.பி.எல் வரலாற்றில் முதன்முறையாக  ‘ரிட்டையர்டு அவுட்’  முறையில் வெளியேறிய  முதல் வீரராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்  ரவிச்சந்திரன் அஸ்வின் மாறியுள்ளார்.

15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின்  20 -வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் 3 ரன்கள்  வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி திரில் வெற்றி பெற்றது. 

இந்த  போட்டியின் போது 6-வது வீரராக களமிறங்கிய அஸ்வின் 23 பந்துகளில் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில்,  ‘ரிட்டையர்டு அவுட்’  முறையில் வெளியேறினார். அவருடன் நடுவரிசையில் களமிறங்கி அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த ஷிம்ரோன் ஹெட்மயர் உடன் இணைந்து இளம் வீரர் ரியான் பராக் பேட் செய்ய ஏதுவாக அவர் அவ்வாறு வெளியேறியதாக கூறப்படுகிறது.

 இந்நிலையில் இது குறித்து அஸ்வின் அவரது யூடியூபில் சேனலில்  கூறுகையில் ;

ஐபிஎல் ஏற்கனவே "ரிட்டையர்டு அவுட்" முறையை  பயன்படுத்துவதில் தாமதமாகிவிட்டதாக கூறினார் .மேலும்  வரும் நாட்களில் இது (ரிட்டையர்டு அவுட்’  முறை)  நிறைய நடக்கும் என்று நம்புகிறேன் .இவ்வாறு கூறியுள்ளார். 


Next Story