ஐபிஎல் : ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி தடுமாற்றம்


Image Courtesy : IPL
x
Image Courtesy : IPL
தினத்தந்தி 14 April 2022 2:49 PM GMT (Updated: 2022-04-14T20:19:51+05:30)

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது


மும்பை,

15-வது சீசன் ஐபிஎல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 23 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 24-வது லீக் போட்டி மும்பையில் உள்ள டி.ஒய் பட்டேல் மைதானத்தில்நடைபெறுகிறது.

இன்று நடைபெறும் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கத்தில் மேத்யூ வேட் (ரன் அவுட் ) 12 ரன்களிலும்,  விஜய் ஷங்கர் 2 ரன்களிலும் ,சுப்மன் கில் 13 ரன்களிலும் ஆட்டமிழந்ததால் .அதிரடியாக ரன்கள் சேர்க்க முடியாமல் குஜராத் அணி தடுமாறி வருகிறது .அந்த அணி தற்போது வரை 10 ஓவர்களுக்கு 3 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்துள்ளது 

Next Story