ஐபிஎல்; பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டேவிட் வார்னர் அரைசதம்


Image Courtesy : IPL
x
Image Courtesy : IPL
தினத்தந்தி 16 April 2022 5:09 PM GMT (Updated: 16 April 2022 5:09 PM GMT)

இன்று நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு -டெல்லி அணிகள் மோதுகின்றன .

மும்பை,

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது.இன்று நடைபெறும்  27 வது லீக்  ஆட்டத்தில் பெங்களூரு -டெல்லி அணிகள் மோதுகின்றன .

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி  பெங்களூரு முதலில் பேட்டிங் செய்தது .

தொடக்க வீரர்களாக டு பிளெஸ்சிஸ் ,அனுஜ் ராவத் களமிறங்கினர் . தொடக்கத்தில் இருவரும் ஆட்டமிழந்தனர் ,ராவத் ரன் எடுக்காமலும் ,டு பிளெஸ்சிஸ் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த விராட் கோலி 12 ரன்களில் (ரன் அவுட் )  விக்கெட்டை பறிகொடுத்தார் .

40 ரன்களில் 3 விக்கெட் இழந்து பெங்களூரு அணு தடுமாறியது , விக்கெட்டுக்களை இழந்தாலும் மறுபுறம் கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடினார் ,டெல்லி அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஓவரில் 2 சிக்ஸர் ,2 பவுண்டரி பறக்கவிட்டார் . 

சிறப்பாக விளையாடிய அவர் 30 பந்துகளில் அரைசதம் அடித்தார் .தொடர்ந்து விளையாடிய அவர் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் 55 ரன்களில் ஆட்டமிழந்தார் .

பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் கடைசி நேரத்தில் அதிரடி காட்டினார்  முஸ்தபிசுர் ரஹ்மான் ஓவரில்  4 பவுண்டரி ,2 சிக்ஸர் , பறக்க விட்டார் . .

மறுபுறம் ஷாபாஸ் அகமது   தனது  பங்குக்கு அதிரடியில் 21 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார் 

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது .தினேஷ் கார்த்திக் அதிகபட்சமாக 34 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார்,

இதனை தொடர்ந்து 190 ரன்கள் என்ற இலக்குடன் டெல்லி அணி  விளையாடியது .தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் பிரித்வி ஷா களமிறங்கினர் .சிறப்பாக விளையாடி தொடக்க விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தனர்.பின்னர் பிரித்வி ஷா 16 ரன்களில் ஆட்டமிழந்தார் .

அடுத்த வந்த மிட்செல் மார்ஷ் , நிதனமாக ஆடினார் .மறுபுறம் டேவிட் வார்னர் அதிரடி காட்டினார் .29 பந்துகளில் அரைசதம் அடித்த அவர் 38 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்  

Next Story