ஐபிஎல் : ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி தடுமாற்றம்


Image Courtesy : IPL
x
Image Courtesy : IPL
தினத்தந்தி 17 April 2022 10:52 AM GMT (Updated: 2022-04-17T16:22:58+05:30)

இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஹைதராபாத் - பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

மும்பை,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரில் இன்று  நடைபெறும் ஆட்டத்தில்  ஹைதராபாத் - பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது .

அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான் 8 ரன்களிலும் ,பிரப்சிம்ரன் சிங் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர் .பின்னர்   வந்த  ஜானி பேர்ஸ்டோ 12 ரன்களில் ,ஜிதேஷ் சர்மா 12 ரன்களிலும் ஆட்டமிழந்தார் .

இதனால் தற்போதுவரை பஞ்சாப் அணி 9 ஓவர்களில் 62 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறி வருகிறது 


Next Story