நாம் தோற்றுவிட்டோம் என தெரியும்..ஆனால் ..கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் கருத்து


Image Courtesy : PTI
x
Image Courtesy : PTI
தினத்தந்தி 19 April 2022 5:39 AM GMT (Updated: 2022-04-19T11:09:25+05:30)

நேற்று நடைபெற்ற 30-வது லீக் போட்டியில் ராஜஸ்தான்-கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தின

மும்பை,

ஐபிஎல் தொடரில் நேற்று  நடைபெற்ற 30-வது லீக் போட்டியில் ராஜஸ்தான்-கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டி மும்பையில் உள்ள பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணியில்  அதிகபட்சமாக பட்லர்  சதம் அடித்தார் 

 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.

இறுதி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 3 ரன்கள் மட்டுமே அடித்தநிலையில் கொல்கத்தா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் ராஜஸ்தான் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக, சிறப்பாக விளையாடிய ஷ்ரேயாஸ் அய்யர் 85 ரன்களும் ,ஆரோன் பின்ச் 58 ரன்களும் எடுத்தனர்.

இந்நிலையில் கொல்கத்தா அணியின்  உரிமையாளர் ஷாருக்கான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;

நாம் தோற்று  விட்டோம் என எனக்கு தெரியும் . ஆனால் நீங்கள் நன்றாக விளையாடினீர்கள் . ( ஷ்ரேயாஸ் அய்யர் .ஆரோன் பின்ச் ,உமேஷ் யாதவ் ) பெரும் முயற்சியில் ஈடுபட்டனர் .150வது போட்டியில் விளையாடிய சுனில் நரைன் க்கு  வாழ்த்துக்கள்.

Next Story