டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தனிமைப்படுத்தப்பட்டார்


டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தனிமைப்படுத்தப்பட்டார்
x
தினத்தந்தி 23 April 2022 12:53 AM GMT (Updated: 2022-04-23T06:23:11+05:30)

ரிக்கி பாண்டிங்கின் குடும்ப உறுப்பினருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, அவர் 5 நாட்கள் தனிமையில் வைக்கப்பட்டுள்ளார்.

மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் வீரர்கள் மிட்செல் மார்ஷ், டிம்செய்பெர்ட் மற்றும் 4 உதவியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்குடன் அணியின் ஓட்டல் அறையில் தங்கி இருந்த அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் கொரோனா தொற்றில் சிக்கி இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. 

இதையடுத்து ரிக்கி பாண்டிங்கின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பாண்டிங்குக்கு இரண்டு முறை நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்து இருக்கிறது. இருப்பினும் அவர் அணியின் நலன் கருதி 5 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். 

டெல்லி அணியின் மற்ற வீரர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானதால் திட்டமிட்டப்படி டெல்லி அணி நேற்று ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடியது. ஆனால் அணியினருடன் ரிக்கி பாண்டிங் கலந்து கொள்ள முடியவில்லை.

Next Story