ஒரே புள்ளிகளுடன் 3 அணிகள் - சுவாரஸ்ய ஐபிஎல் புள்ளிப் பட்டியல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 24 April 2022 6:54 AM GMT (Updated: 2022-04-24T12:24:04+05:30)

புள்ளிப்பட்டியலில் மூன்று அணிகள் 10 புள்ளிகளுடனும், மற்றொரு மூன்று அணிகள் 6 புள்ளிகளுடனும் உள்ளது.

மும்பை,

15ஆவது ஐபிஎல் போட்டிகள் மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணிகளும் எதிரணியுடன் வெற்றிக்கு மல்லுக்கட்டி வருகின்றன. இந்த நிலையில், புள்ளிப்பட்டியல் ஒவ்வொரு நாளும் மாற்றத்தை சந்தித்து வருகிறது.

தற்போதைய கணக்குப்படி, ஐ.பி.எல் தொடரில் 12 புள்ளிகளுடன் குஜராத் அணி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது. ஐதராபாத், ராஜஸ்தான் பெங்களூரு ஆகிய அணிகள் தலா 10 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் 2, 3, மற்றும் 4 ஆம் இடங்களில் உள்ளன.

லக்னோ அணி 8 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்தில் உள்ளது. டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய அணிகள் தலா 6 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. சென்னை அணி 4 புள்ளிகளுடன் 9 வது இடத்தில் உள்ள நிலையில் வெற்றிக் கணக்கை இதுவரை தொடங்காத மும்பை அணி, கடைசி இடத்தில் பரிதாபத்துடன் உள்ளது.


Next Story