பிரம்மிக்க வைக்கும் வேகம் : நடப்பு ஐபிஎல் தொடரில் அதிவேகமாக பந்துவீசி உம்ரான் மாலிக் சாதனை


Image Courtesy : IPL
x
Image Courtesy : IPL
தினத்தந்தி 5 May 2022 5:05 PM GMT (Updated: 5 May 2022 5:05 PM GMT)

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிவேகமாக பந்துவீசி உம்ரான் மாலிக் சாதனை படைத்துள்ளார்

மும்பை, 

15வது ஐபிஎல் சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி - ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன 

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி டெல்லி அணி  முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 207 ரன்கள் குவித்தது .

இந்த போட்டியில் ஆட்டத்தின் 20 ஓவரை வீசிய உம்ரான் மாலிக் அந்த ஓவரின் 
4 வது பந்தில் பிரம்மிக்க வைக்கும் வேகத்தில் பந்துவீசினார் .அதிக பட்சமாக மணிக்கு 157  கிலோ மீட்டர் வேகத்தில் அந்த பந்தை அவர் வீசினார்.  இந்த பந்தை எதிர்கொண்ட ரோவ்மன் பவல் பவுண்டரி விளாசினார் .

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிவேகமாக பந்துவீசிய அவரின் சாதனையை அவரே முறியடித்துள்ளார் .இதற்கு முன்பு 154 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசிய  உம்ரான் மாலிக் தற்போது மணிக்கு 157  கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி சாதனை படைத்துள்ளார் .

 உம்ரான் மாலிக் இந்த போட்டியில் 4 ஓவர்களில் 52 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story