தினேஷ் கார்த்திக் பேட்டிங் குறித்து ஹர்பஜன்சிங் புகழாரம்


தினேஷ் கார்த்திக் பேட்டிங் குறித்து ஹர்பஜன்சிங் புகழாரம்
x
தினத்தந்தி 13 May 2022 10:30 PM GMT (Updated: 2022-05-14T04:00:36+05:30)

ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் தினேஷ் கார்த்திக் கில்லாடியாக திகழ்கிறார் என ஹர்பஜன்சிங் கூறியுள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அளித்த ஒரு பேட்டியில், “ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக ஆடும் தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.” என்று கூறியுள்ளார்.

மேலும், “அவர் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் கில்லாடியாக திகழ்கிறார். நான் தேர்வாளராக இருந்தால் ஆஸ்திரேலியாவில் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணிக்கு அவரை நிச்சயம் தேர்வு செய்வேன்” என்று ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.

Next Story