ஐபிஎல் : புள்ளி பட்டியலில் கொல்கத்தா அணி 6வது இடத்துக்கு முன்னேற்றம்


Image Courtesy : IPL
x
Image Courtesy : IPL
தினத்தந்தி 14 May 2022 6:45 PM GMT (Updated: 2022-05-15T00:15:57+05:30)

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா - ஹைதராபாத் அணிகள் மோதின

புனே, 

ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று  நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா - ஹைதராபாத் அணிகள் மோதின 

இந்த போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது .இந்த வெற்றியால் கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் 6 வது இடத்திற்கு முன்னேறியது .

தற்போதைய நிலவரப்படி, குஜராத் அணி பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், மும்பை, சென்னை அணிகள் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டன.

லக்னோ  அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றுவிட்டால், பிளேஆப் வாய்ப்பை உறுதிசெய்துவிடும். மீதமுள்ள ஆறு  அணிகளும் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே பிளேஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற சூழல் உள்ளதால், இனி வரும் போட்டிகளில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது 

Next Story