எங்கள் அணியினர் பயமற்ற கிரிக்கெட் விளையாடினார்கள் - கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர்


Image Courtesy : Kolkata Knight Riders Twitter
x
Image Courtesy : Kolkata Knight Riders Twitter
தினத்தந்தி 15 May 2022 3:00 PM GMT (Updated: 2022-05-15T20:30:34+05:30)

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .

புனே, 

ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா - ஹைதராபாத் அணிகள் மோதின 

இந்த போட்டியில் கொல்கத்தா அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .

போட்டிக்கு பிறகு பேசிய கொல்கத்தா அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் கூறியதாவது ;

 போட்டியில் நாங்கள் வந்த மனநிலை,  மிகச் சிறப்பாக இருந்தது. எல்லா வீரர்களும் சரியான விஷயங்களைச் செய்தார்கள், பயமற்ற கிரிக்கெட் விளையாடினார்கள் .

ஆண்ட்ரே ரசல்-க்கு  பேட்டிங் வாய்ப்பை கொடுப்பதே எங்களது திட்டமாக இருந்தது 

கடைசி ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீச இருப்பதை தெரிந்து அவரை குறி வைத்தோம் அது சிறப்பாக வேலை செய்தது .இறுதி ஆட்டத்திலும் இந்த திட்டம் சிறப்பாக செயல்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.  நரேன், வருண் நன்றாக பந்துவீசினர். புத்திசாலித்தனமாக பந்துவீசி முக்கியமான விக்கெட்டுகளைப் வீழ்த்தினர்.இவ்வாறு தெரிவித்தார் .  

Related Tags :
Next Story