2 வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீசுக்கு 276 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்


2 வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீசுக்கு 276 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்
x

பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் எடுத்துள்ளது.

முல்டன்,

வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானுக்கு சென்று ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியை பாகிஸ்தான் அணி வென்றுள்ள நிலையில், இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

முல்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி அந்த அணி முதலில் களமிறங்கியது.

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் ஆசம் 77 ரன்கள் எடுத்தார். தொடக்க ஆட்டக்காரரான இமாம் உல் ஹாக் 72 ரன்கள் எடுத்தார். அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் எடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அகில் ஹுசேன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடி வருகிறது.


Next Story