2வது டி20 போட்டி; இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் நாளை மோதல்..!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
க்கெபெர்ஹா,
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி டர்பனில் நேற்று நடைபெற இருந்தது.
ஆனால் மழை காரணமாக இந்த போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது. நாளை நடைபெறும் போட்டியில் தோல்வி அடையும் அணிக்கு தொடரை கைப்பற்றும் வாய்ப்பு குறைந்துவிடும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும்.
இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் நாளை இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது.
Related Tags :
Next Story